வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்கச் சென்று ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபர்... நீச்சல் தெரிந்திருந்ததால் உயிர் பிழைப்பு!

0 3083

புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர், நீச்சல் தெரிந்திருந்ததால் தப்பித்து கரையேறியுள்ளார். 

முத்துராஜ் என்ற அந்த நபர், வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்கச் சென்று, ஆற்றங்கரையோரம் இறங்கிய போது கால் தவறி ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்பதற்காக பாதுகாப்பு பலூனை ஆற்றில் போட்டுள்ளனர்.

அதைபிடித்துக் கொண்டு அவர் கரையேற முயன்ற போது கயிறு அறுபட்டு அவர் மீண்டும் அடித்துச் செல்லப்பட்டார். பின்னர், நீச்சல் தெரிந்திருந்ததால் திருக்காஞ்சி கோயில் அருகே கரையேறிய முத்துராஜ் வீட்டுக்கு சென்றார்.

இதையறியாமல் இரவு முழுவதும் தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் அவரை தேடி வந்த நிலையில், தான் பாதுகாப்பாக கரையேறிவிட்டதாக முத்துராஜ் வீடியோ வெளியிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments